• எழுத்துரு அளவினை அதிகரிக்க
 • பொதுஇருப்பு எழுத்துரு அளவு
 • எழுத்துரு அளவினைக் குறைக்க
தென் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபை வரவேற்கின்றோம்!
முகப்பு சேவைகள் வழங்கல்

எமது சேவை

சிறந்த வசதிகளுடனும், வினைத்திறனுடனும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பாதுகாப்புடன் நிறைவேற்றிவரும் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த இருபாலாரும் உரியமுறையில் போக்குவரத்து சேவையை மேற்கொள்வதனை நோக்கமாகக்கொண்டு நிரந்தர போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கலும் மீள்பரிசீலனை செய்தலும்.

பயணிகள் போக்குவரத்துடன் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி, பாடசாலை வான் வண்டிச் சேவைகளைப் பதிவு செய்வதை ஒழுங்குபடுத்தலும் அது சம்பந்தமான சட்டதிட்டங்களை ஏற்படுத்தலும்.

அந்த அந்த வீதிகளில் பயணம் செய்கின்ற பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறந்த முறையில் தீர்மானிக்கப்பட்ட பொது நேர அட்டவணையைத் தயாரித்தல், போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்பவர்களிடையே அந்த நேர அட்டவணையை இலகுவான முறையில் விநியோகித்தல், நேர அட்டவணைப்படி போக்குவரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்தல், பஸ் சேவை முகாமைத்துவ நடவடிக்கைக்காக உத்தியோகத்தர் சபையை அமைத்தலும் கண்காணித்தலும்.

இரவு மற்றும் அதிகாலை பஸ் சேவையை நடைபெறச்செய்தல்.

காரியாலய சேவையை மேற்கொள்ளுதல்.

பாடசாலை சேவையை மேற்கொள்ளுதல்.

உள்ளுர் வீதிகளில் சேவையை மேற்கொள்ளுதல் 

பயணிகள் மற்றும் ஏனைய அனைத்துச் சேவைகளை ஒழுங்கு முறையில் மேற்கொள்வதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்..

பஸ் தரிப்பிடங்கள் அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.

பஸ் தரிப்பிடங்கள் அமைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.

பஸ் தரிப்பிடங்களைக் குறித்துக்காட்டுதல்.  

பயணிகள் மற்றும் ஏனைய அனைத்துச் சேவைகளையூம் முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தல், வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை வழங்குதல், வசதிகளை ஏற்படுத்தி போக்குவரத்துச் சேவையிலீடுபடும் அனைவருக்கும் பயிற்சி வழங்கல், சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு இதனைத் தெரியப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்தல்.

சாரதி / நடத்துனருக்குப் பயிற்சி வழங்குதல்.

காரியாலய ஊழியர்களுக்கு பயற்சி வழங்குதல் .

ஊழியர்களுக்கான நேரஅட்டணை பயிற்சி வழங்குதல்.

பிரயாணிகளின் பாதுகாப்புதொடர்பான வேலைத்திட்டம்.

 

தென் மாகாண சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது வேறு மாகாணசபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆணை வழங்குதல் மற்றும் போக்குவரத்துப் பிரச்சனைகளை உரிய முறையில் தீர்த்து வைக்கப்படுவதுடன் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்தல்.

மக்கள் முறைப்பாடுகள்.

போக்குவரத்துச் சேவை பற்றிய முறைப்பாடுகள் 

பயணிகள் போக்குவரத்துத் தகவல்களை வழங்குதல்.

பயணிகளின் வசதி கருதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நேர அட்டவணை மற்றும் கட்டண விபரங்களை LCD மூலம் விளம்பரப்படுத்துதல்.

விளக்கப்படத்துடன் பஸ் போக்குவரத்து மார்க்கம் பற்றிய தகவல்களை வழங்குதல். 

பயணிகள் போக்குவரத்துத் தரவுகளைப் பெற்றுக்கொடுத்தல். 

 

 
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern