• எழுத்துரு அளவினை அதிகரிக்க
  • பொதுஇருப்பு எழுத்துரு அளவு
  • எழுத்துரு அளவினைக் குறைக்க
தென் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபை வரவேற்கின்றோம்!
முகப்பு

altதென் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைப் பயணிகளின் போக்குவரத்து வசதிகளை திருப்தியாக வழங்குவதற்காக கடந்த சில வருடங்களாக சிறந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை பாராட்டப்பட வேண்டியது. விசேடமாக விஞ்ஞானரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட பொது நேர அட்டவணை முறைமையை மேற்கொள்ளுதல், காரியாலய சேவைகள்,பாடசாலை சேவைகளை வியாபித்தல், பஸ் சேவையாளர், குழு மற்றும் உத்தியோகத்தா சபைக்கு பயிற்சி வழங்கி மனித வளங்களை சிறந்த முறையில் அபிவிருத்திசெய்து வழங்குதல், வெளியகத்தன்மை கொண்ட போக்குவரத்து மார்க்க அனுமதி வழங்கும் ரென்டர் முறைமையை நிறுவதல் மற்றும் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பன அவற்றில் சிலவாகும்.
இன்று (2009.12.02) பயணிகள் போக்குவரத்து நடவடிக்கை www.sprpta.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அறியப்படுத்துவது பயணிகள் போக்குவரத்து நடைமுறையின் இன்னொரு முக்கிய நடவடிக்கை என நான் கருதுகிறேன்.
இன்று காலத்துடன் கூடிய முன்னேற்றம் தொடர்பான போட்டியே எமக்கிருக்கும் சவாலாகும். தமது நேரத்தை உரிய முறையில் நிர்வகிப்பதற்கு அபிவிருத்தியடைந்த தொழில்நுட்பத்தை மேற்கொண்டு இந்த நடவடிக்கை காரணமாக மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கப்பெற இருக்கிறது, இதன் மூலம் தென் மாகாண பயணிகள் போக்குவரத்து நேர அட்டவணை, பஸ் கட்டணங்கள் அந்தந்த சேவைகளிலுள்ள தூரங்கள் பற்றிய விபரங்கள் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான பயணிகள் போக்குவரத்துத் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. 2009 இலங்கையில் தகவல் தொழில்நுட்ப வருடமாகப் பிரகடனப்படுத்திய காலத்தில் தென் மாகாண போக்குவரத்து இணையத்தளத்தில் இணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகளை எடுத்தமைக்கு அதிகாரசபைக்கும் அதில் பங்குபற்றிய அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.